பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பான அமைச்சு சார்ந்த
ஆலோசனைக் குழு உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (04) கூடியபோதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.
மேலும், வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவிலும் முஜிபுர் ரஹுமான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.