இந்தவாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்றக் கூட்டத்தின்

பின்னர் பலர் கட்சித் தாவல்களை மேற்கொள்ளவுள்ளனர் என  தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்களே  அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த எம்.பி.க்களில் சிரேஷ்ட எம்.பி ஒருவரும் இளம் எம்.பி ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன  அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளத் தயாராகவுள்ளதாக தேசிய பத்திரிகையொன்று நேற்று (01)  செய்தி வெளியிட்டுள்ளது.

விசேட அறிக்கையொன்றை விடுத்து அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜித சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைந்தால் அவருக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டால் அமைச்சுப் பதவிகளில் பல மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது .

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....