ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பை பேணிய சந்தேகத்தில் இலங்கையில்

கைது செய்யப்பட்ட மூவரின் வங்கிக் கணக்குகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கோட்டை நீதிவான் நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரிலேயே இலங்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனனனனனனர்.

அத்துடன், இணையதளத்தில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது தொடர்பான ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர்களுக்கு ஆதரவாகவும் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கடந்த சனிக்கிழமை கோரியிருந்தனர்.

இதன் அடிப்படையில் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என்பவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....