தேர்தலை ஒத்திவைப்பது எந்தவகையிலும்  ஜனநாயகத்துக்குப்

  பொருந்தாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த யோசனைக்கு  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ மற்றும் புதிய கூட்டணியின் தேசிய அமைப்பாளர் நிமல் லான்சா ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். .

தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நாமல் ராஜபக்க்ஷ, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதானது  பாராளுமன்றம் ஜனநாயக நாட்டின் அடிப்படைக் கோட்பாடுகளை சேதப்படுத்தியுள்ளது.

மஹிந்த ராஜபக்க்ஷ ஆட்சியில் இருந்தபோது உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல்கள் ஒத்திவைக்கப்படவில்லை. 

ஒரு நாட்டின் அரசியல் மற்றும் ஸ்திரத்தன்மை என்பது மக்களின் விருப்பத்தினாலேயே வரவேண்டும் என்றும் அவர்களின் குரலை தாமதிப்பதன் மூலம் அல்ல என்றும் நாமல் ராஜபக்க்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரின் இந்தக் கருத்து தொடர்பில் கருத்துத் தெரிவித்த புதிய கூட்டணியின் தேசிய அமைப்பாளர் நிமல் லான்சா, அரசியலமைப்பின்படி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரின்  கூற்று ஒரு 'பைத்தியக்காரக் கதை' என அவர் குறிப்பிட்டுள்ளார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி