ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டதாகக்  கூறப்படும் கலால் திணைக்கள அதிகாரி மற்றும் தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளர் உட்பட  ஐவரை அலவத்துகொட பொலி

ஸார் கைது செய்துள்ளனர்.

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் அலவத்துகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, அவருக்கு போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பான விசாரணையின்போது, ​​போதைப்பொருளை வழங்கிய நபர்  தொடர்பான  உண்மைகளை வெளிப்படுத்திய  நிலையில் பொலிஸார், போதைப்பொருளை முகவர்  மூலம் கொள்வனவு செய்த அந்த நபரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, ​​அவர் கொழும்பு கலால் திணைக்கள  தலைமை அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்  என தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட கலால் திணைக்கள உத்தியோகத்தரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள், ஐஸ், கஞ்சா, டிஜிட்டல் தராசு மற்றும் பத்தாயிரம் ரூபா பணத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....