இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்

உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களை விசாரிக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர்கள் தலைமையிலான குழுவை பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்த நான்கு இலங்கையர்களும் கடந்த 20ஆம் திகதி இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் தேசிய தௌஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக இந்தியாவின் தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி