ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்க்ஷவை

நியமித்த தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன்விதான இன்று (16)  நிராகரித்துள்ளார். 

துமிந்த திஸாநாயக்க சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் ஏக்கநாயக்க, அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ, கீர்த்தி உடவத்த, தலைவர்   நிமல் சிறிபால டி சில்வா, சிரேஷ்ட உப  தலைவர்   மஹிந்த அமரவீர ஆகியோர் தாக்கல் செய்த வழக்கின் விவாதங்களைப் பரிசீலித்த பின்னரே இந்த  தடை உத்தரவு  கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த முறைப்பாட்டை திருத்தி மீண்டும் உறுதிப்படுத்தி வழக்கைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு வாய்ப்பு உள்ளது என நீதிபதி சந்துன் விதான தனது உத்தரவை அறிவிக்கும் போதே மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி