தியத்தலாவ மோட்டார் பந்தய போட்டியின்போது இடம்பெற்ற
வாகன விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
தியத்தலாவ கலெதந்த ஹெலகெதர பிரதேசத்தில் வசித்த டபிள்யூ.பி. சட்சராணி சார்மிந்தி (16) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை மோட்டார் ரைடர்ஸ் அசோஸியேஷன் மற்றும் தியத்தலாவ இராணுவ விஞ்ஞான பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டி கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தியத்தலாவ நரியகந்த இடம்பெற்றது தெரிந்தததே.