ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன அணியினரின்

செயற்குழு கூட்டம் நேற்று  (12)  பிட்டகோட்டையிலுள்ள உள்ள தனியார் ஹோட்டல்  ஒன்றில் இடம்பெற்றதுடன் கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமான தலைவர் பதவிக்கு விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவு செய்யப்பட்டார்.

கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சட்டத்தரணி கீர்த்தி உடவத்த தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு  கூட்டத்தை கூட்டுவதற்கு  அதிகாரம் கொண்டவர் அல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின்  அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக கடமையாற்றும் சரத் ஏக்கநாயக்கவுக்கு இது தொடர்பில் கடிதம் எழுதியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, இவ்வாறான கூட்டங்களை நடத்துவது நீதிமன்ற தடை உத்தரவை மீறும் செயலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Dumi

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி