மலேஷியாவில் உள்ள உணவகம் ஒன்றில் கொதிகலனுக்குள் வீழ்ந்து
உயிரிழந்த இளைஞனின் சடலம் மஸ்கெலியா மோட்டிங்ஹாம் பிரிவில் உள்ள பிரன்சுவிக் தேயிலைத் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
ராஜ்குமார் டேவிட்சன் என்ற 24 வயது திருமணமாகாத இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மலேஷியாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அங்கு, அடுப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது கொதிகலனில் தவறி வீழ்ந்து அவர் பலத்த எரிகாணங்களுக்கு உள்ளானர்.
கொதிநீர் உடலின் பெரும்பகுதியை எரிந்ததால் பலத்த காயங்களுடன் மலேஷியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.