பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ஈ விசா முறை அமுல்படுத்தப்படுவது

தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் VFS குளோபல் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில், VFS குளோபல் நிறுவனம் 2004 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், தனது நிறுவனம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, நோர்வே, ஆஸ்திரியா, லாட்வியா, ஹங்கேரி, குரோஷியா, மால்டா மற்றும் கிரீஸ் உள்ளிட்ட 23 நாடுகளுக்கான விசா விண்ணப்பங்களைத் தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 6 விசா மையங்களை தமது நிறுவனம் நடத்தி வருவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையங்களில் 123 இலங்கையர்கள் பணிபுரிவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2004 ஆம் ஆண்டு முதல், அவர்கள் 3.2 மில்லியனுக்கும் அதிகமான விசா விண்ணப்பங்களுக்கான சேவைகளை வழங்கியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் ஆரம்பித்துள்ள புதிய E-Visa முறைமைக்காக குடிவரவுத் திணைக்களம் அதன் VFS Global நிறுவனத்துக்கு மேலதிகமாக GBS தொழில்நுட்ப சேவைகள் மற்றும் IVS Global FZCO நிறுவனங்களுடன் முத்தரப்பு உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி