ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு, கொழும்பு மாவட்ட

நீதிமன்றத்தினால் இன்று (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொண்டேகு சரத்சந்திர சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பில் கவனத்திற்கொண்ட கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், விசாரணை முடியும் வரை இந்தத் தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்றும், நீதவான் அறிவித்தார்.

இதேவேளை, அமைச்சர் மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தடை உத்தரவை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பிட்டுள்ளது.

இந்தத் தடையுத்தரவானது, எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி வரை நீடிக்குமாறு நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராக அமைச்சர்கள் தாக்கல் செய்த முறைப்பாடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி