ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் பிளவடைந்துள்ளதுடன், அவை பாரிய பின்னடைவையும்

சந்தித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியன பிளவடைந்துள்ளது.

தற்போதைய நிலையில் பலமிக்க கட்சியென்றால் ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே.

ஊழல் மோசடிகளில் ஈடுபடாத அதேபோல் மக்களை கொலை செய்யாத நேர்மையான ஒருவரே எமது கட்சியின் தலைவராவார்.

எமது கட்சியில் நாட்டு மக்களின் தேவையறிந்து வேலை செய்யக்கூடிய பலம் பொருந்திய இளம் உறுப்பினர்கள் உள்ளனர்.

எனவே நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலேயே அங்கம் வகிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

01 WhatsApp Tamil 350

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி