Fox Hill இல் இடம்பெற்ற பயங்கர விபத்தின் பின்னர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட Fox Hill Journey எனும் DJ இரவு தொடர்பில், இலங்கை

இராணுவத் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த DJ இரவுக்கும் இராணுவத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டாரவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றினால் Fox Hill Journey எனும் DJ இரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், Fox Hill Supercross கார் பந்தயத்தை காண வரும் பார்வையாளர்களை குறிவைத்து Fox Hill Journey DJ நைட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு இராணுவமும் அதிர்ச்சியடைந்திருந்த வேளையில், இராணுவத்தினரோ அல்லது இலங்கை ஒட்டோமொபைல் விளையாட்டு சங்கத்தினரின் ஆதரவின்றி முழு  Fox Hill Journey DJ இரவு ஏற்பாடு செய்யப்பட்டதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

01 WhatsApp Tamil 350

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி