ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் பெயரை

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, விஜயதாச ராஜபக்ஷவின் பெயர் மற்றும் நிறைவேற்று சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 20 ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று (21) காலை எத்துல்கோட்டெ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கூடியது.

இந்த நிர்வாக சபை கூட்டத்தில் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.

இங்கு கருத்து தெரிவித்த விஜயதாச ராஜபக்ஷ, “கட்சியை விட்டு வெளியேறிய அனைவரையும் ஒன்று திரட்டி நல்ல பயணத்தை மேற்கொள்ள இன்று கிடைத்த சந்தர்ப்பம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டால் கட்சி மேம்படும் என்பது மட்டுமன்றி நாடும் முன்னேற்றமடையும் என உறுதியளிக்கிறோம். எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெறும்” என தெரிவித்தார்.

 

 

01 WhatsApp Tamil 350

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி