ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கான விசேட கூட்டம், இன்று (21)

காலை 10 மணிக்கு, கோட்டே சோலிஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவினால், இந்தச் சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, பதில் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பதவிப் பகிர்வு தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தணிக்கைக்கு உள்ளான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சி, நேற்றும் (20) அரசியல் குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அது, ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் இடம்பெற்றது.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிப்பதற்காக, பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவினால் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், தற்போதைய பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் குழு, அந்த முயற்சியைத் தோற்கடித்தது.

பொருளாளர் லசந்த அழகியவன்ன, தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் அந்த இடத்திற்குச் சென்று, இது சட்டரீதியான சந்திப்பு அல்ல எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கட்சியின் செயலாளர் துஷ்மந்த மித்ரபால தலைமையில் நடைபெற்ற கூட்டம் சட்டப்பூர்வமானது அல்ல என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம், இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் குழு ஒன்றும் இந்த சந்திப்பில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் கட்சியின் பதில் செயலாளரினால் நடத்தப்பட்டதாக கூறப்படும் கூட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து செயற்படும் குழுவினர், கலந்தாலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 

01 WhatsApp Tamil 350

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி