இதோ, இன்னுமொரு செய்தி சூடு பிடித்திருக்கிறது. ஹர்ஷ, காவிந்த, மான்னப்பெரும் மற்றும் ஜேசி ஆகியோருக்கு, ஜனாதிபதி விசேட

சலுகை வழங்குகிறார் என்று சில சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்த்தன, அஜித் மான்னப்பெரும மற்றும் ஜே சி அலவத்துவல ஆகிய மூவருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதேச அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டத்துக்கான நிதியை வழங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

மொட்டுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் ஊடாக முன்வைத்திருக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு நிதி வழங்க, திறைசேறி இழுத்தடிப்பு செய்து வருவதாக குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், மேற்படி ஐமச எம்பிக்களுக்கு நிதி வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

காவிந்த ஜயவர்த்தன மற்றும் அஜித் மான்னப்பெரும ஆகியோர், ஐமச எம்பிக்கள் முன்வைத்திருக்கும் வேலைத்திட்டங்களுக்கான யோசனைகளுக்கு, 50 அல்லது 60 மில்லியன் ரூபாய் செலவாகும் என்றும் அந்த நிதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதேவேளை, ஹர்ஷ டீ சில்வா எம்பியினால் ஜனாதிபதிக்கு நேரடியாக முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு வேலைதிட்டங்களுக்காகவும் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை பெற்றுக்கொடுக்க, ஜனாதிபதி ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதாவது ஐமச எம்பிக்களை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தும் உத்தியை, ஜனாதிபதி விக்ரமசிங்க கையாண்டு வருகிறார் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, காவிந்த ஜயவர்த்தனவின் வீட்டில் நடைபெற்ற இரவு விருந்துபசார நிகழ்வு ஒன்றிலும், ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

அதில், ஐமச எம்பிக்கள் இருவரும் கலந்துகொண்டிருந்ததாக தெரியவந்தது. அன்றைய தினம் தனக்கு இருந்த ஏனைய வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டுதான், அன்று மாலை காவிந்த எம்பியின் வீட்டுக்கு ஜனாதிபதி சென்றிருந்தார் என்று கூறப்படுகிறது. எதுவாயினும், ஜனாதிபதி விக்ரமசிங்க இம்முறை தனக்குத் தெரிந்த அனைத்து விளையாட்டுகளையும் விளையாடுவார் என்றே தெரிகிறது. காரணம், பெரும்பாலும் இதுதான் அவருக்கு இறுதி வாய்ப்பாக அமைய உள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி