முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தலைமையில் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் குழு இன்று நடத்திய

அரசியல்பீடக் கூட்டம் சட்டவிரோதமானது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சார்த்தி துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம், கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அரசியல் சபையைக் கூட்டுவதற்கு அதிகாரம் உள்ளதுடன், அவருக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் கட்சியின் செயற்குழுத் தலைவராக ஒருவரை நியமிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டுமென துஷ்மந்த மித்ரபால சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த சட்டவிரோத செயலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது, ​​சட்ட கட்டமைப்பிற்கு அமைவாக உரிய நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி செயற்படும் என சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி