விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி வரை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சந்தேகநபர்கள் 7 பேரும், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று (08) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அங்கு முதலாம், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஐந்தாவது சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், 10ஆம் மற்றும் 11ஆம் சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி பிணை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி