ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கப் போகிறார் என்று, எதிர்க்கட்சியின் சிலர் முன்வைத்த Propaganda,

இப்போது முடிந்துவிட்டது. ஜனாதிபதித் தேர்தலுக்கான பணிகளை, தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்திருக்கிறது.

அதனால், புதிய வேறு கதைகளைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலையும் பொது தேர்தலையும் ஒரே நாளில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் என்று, உதய கம்மன்பில புதிய கதை ஒன்றை சொல்லத் தொடங்கி இருக்கிறார்.

ஜனாதிபதியினதும் மொட்டுக் கட்சியினதும் தேவைகளை நிவர்த்திக்கும் வகையில், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒரே நாளில் நடத்தத் தயாராகி வருவதாக, அரசாங்கத்துக்குள்ளேயே ஒரு பேச்சு நிலவுவதாக, அரசாங்த் தரப்பிலிருந்து, நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன என்று, கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு தேவை, தனது ஜனாதிபதி கனவு பழிக்க வேண்டும் என்பதாகும். ஜனாதிபதி தேர்தல் வரையில் பொதுத் தேர்தலை நடத்தாமல் இருக்கவேண்டும். பெசில் ராஜபக்ஷவுக்கு, ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைப் பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்கு முன்னர், பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென்பதே, பெசில் ராஜபக்ஷவின் முடிவாக இருக்கிறது.

அதனால்தான், பொதுத் தேர்தலை முதலில் நடத்துமாறு, பெசில் வலியுறுத்தி வருகிறார். அதனால்தான், அவரது கோரிக்கையை, ஜனாதிபதி நிறைவேற்றாமல் இருக்கிறார். இந்நிலையில், இந்த இரண்டு தரப்பினருடைய தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒரே நாளில் நடத்துவதற்கு, அரசாங்கத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக, நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வருவதாக கம்மன்பில குறிப்பிட்டிருக்கிறார்.

“இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதில் எந்த தடையும் இல்லை. 2024 ஜூலை 17-ம் திகதிக்கும் செப்டம்பர் 4-ம் திகதிக்கும் இடையிலான எந்தவொரு நாளிலும், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை அறிவிக்க முடியுமென்று, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது. வேட்பு மனுக்கலுக்கான நாள் அறிவிக்கப்பட்டவுடன், ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின், இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த முடியும். அவ்வாறு நடத்தினால், ஜனாதிபதிக்கு போன்றே, மொட்டுக் கட்சிக்கும் அது சாதகமாக அமையும். ஆனால், அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க நாங்கள் தயாராக இல்லை” என்று கம்மன்பில குறிப்பிட்டிருக்கிறார்.

உண்மையில், கம்மன்பிலவுக்கு கிடைத்த தகவல் உண்மையாக இருக்கலாம். காரணம், ஜனாதிபதியுடனான தொடர்பை முடித்துக்கொள்ள, பெசில் ஒருபோதும் விரும்பவில்லை. அத்துடன், மொட்டுக் கட்சிக்குள் இருக்கும் உள்ளகப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும் அவர் கடும் முயற்சி செய்து வருகிறார். கட்சி பிளவுபடாமல், அதை இறுகப் பற்றிப் பிடித்துக்கொண்டிருப்பவர் பெசிலே.

இதற்கிடையில், அனைத்தையும் போட்டது போட்டபடி வைத்துவிட்டு, அவர் அமெரிக்காவுக்குச் செல்ல இருக்கிறார் என்றும் ஒரு கதை அடிபடுகிறது. முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவினால் எந்தப் பிரச்சினை வருமோ என்ற அச்சம்தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இன்னும் நாட்கள் செல்லச் செல்ல, அவர் என்னென்ன கதைகளைச் சொல்லுவாரோ என்ற அச்சம் தற்போது நிலவுகிறது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் தாங்கள்தான் என்றும் அதற்கான வெளிநாட்டுத் தரகராக பெசில்தான் செயற்பட்டார் என்றும் மைத்திரி கூறிவிட்டால், விமான நிலையத்துக்கு செல்வதற்கான கதவுகள்கூட பெசிலுக்கு மூடப்படும் என்ற அச்சம் தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ளதாம். காரணம், இலங்கையில் இருக்கும் சிறந்த இந்தியன் ஏஜென்ட் பெசில்தான் என்பது, யாவரும் அறிந்த உண்மை.

தேர்தல் கதைகளுக்கு இடையில் இவ்வாறு நினைத்துக்கூட பார்க்க முடியாத கதைகள் பலவற்றை, எதிர்வரும் நாட்களில் கேட்கக்கூடியதாக இருக்கும். எவ்வாறாயினும், பெசில் ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்கவுக்கு சென்றுவிட்டால், அது ஜனாதிபதிக்கு சாதகமாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. அது மாத்திரமன்றி, ராஜபக்ஷர்களுக்கு எதிரான சக்தியை திரட்டிக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

அதனால், இனி நடக்கப்போகும் பல நிகழ்வுகளையும், சிறிசேனவின் வாய்தான் தீர்மானிக்கப் போகின்றன என்பது உறுதியாகியுள்ளது. சிறிசேனவின் வாயால் பாதிக்கப்படப்போவது சிறிசேனவா அல்லது பெசிலா, இல்லாவிட்டால் வேறு யாராவதா என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி