திசைக்காட்டினர் தற்போது வடக்கில் தமது பணிகளை ஆரம்பித்திருக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசியக்

கூட்டமைப்புக்கு இடையில் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை ஒன்றும் நடக்க உள்ளது என்று கூறப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தியினால் வடக்கில் முன்னெடுக்கப்பட உள்ள பல நிகழ்வுகளுக்கு இடையில், இந்தச் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாணக் கூட்டம், நான்காம் திகதியன்று யாழ்ப்பாணம் வலம்புரி சங்கிலியன் மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொண்டார்.

தேசிய ஆசிரியர் சேவை சங்கத்தின் வடக்கு மாகாண கூட்டத்தில் உரையாற்றுவதற்காக, அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க, தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இம்முறை எதுவும் இலகுவாக நடக்கப் போவதில்லை என்பது உறுதியாகிறது. இதுவரை காலமும் தெற்கில் மாத்திரம் Game அமைத்துக் கொண்டிருந்த திசைகாட்டி, தற்போது வடக்குக்கும் களமிறங்கி, அங்கு மூளைச்சலவை செய்ய ஆரம்பித்திருக்கிறது. அதனால், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என அனைத்துத் தரப்பினரும் பதற்றமடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் வடக்கு தொடர்பில் அவதானம் செலுத்தாதிருந்த ஜேவிபி, தற்போது வடக்கிலும் கால் பதித்திருப்பது, அக்கட்சியின் ஒரு முக்கிய மைல்கல்லாகத்தான் அமைந்திருக்கிறது.

இது, 2024-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் ஏற்பட்ட மாற்றமாகும். இதுவரையில் நடக்காத ஒன்றாகும். யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக் கூட்டமொன்றின்போது, விஜயவீர மீது கல்லடித் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், வடக்கை முற்றாக ஜேவிபியினர் கைவிட்டிருந்தனர்.

இவ்வாறாக, இதுவரை நடந்த எந்த ஒரு தேர்தலிலும் நடக்காத பல விடயங்கள், 2024 ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி நடக்கின்றமை, முக்கிய அம்சமாகும். இதில் முக்கிய விடயம் என்னவென்றால், ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு, இன்னும் விடுக்கப்படவில்லை.

அதனால், ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர் என்னென்ன நடக்குமோ என்று தெரியவில்லை. அதனால் இன்றைக்கு அவ்வளவுதான்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி