ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கட்சியின் பதில் பொதுச்

செயலாளர் துஷ்மந்த மித்ரபால மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வழிநடத்த விடாமல் தடுப்பது மற்றும் அவரது பிரேரணையின் பேரில், கட்சியின் நிறைவேற்று சபையால், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கிய தீர்மானத்தைத் தடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொண்டு, கட்சியின் அதிகாரத்தைப் மீண்ம் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ள பொதுஜன ஐக்கிய பெரமுன அரசியல் கூட்டணியின் செயற்பாடுகள், சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் தலைமையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முன்னணியின் செயற்பாடுகளை மீண்டும் செயற்படுத்துவதற்கு, கடந்த காலங்களில் பல தரப்பினர் முயற்சித்த போதிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் தடையாகவே கருதப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக்கு எதிராக நீதிமன்றில் சவால் விடுத்து, அந்த தடையை நீக்குவதற்கான உத்தரவை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுத்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஏப்ரல் 4ஆம் திகதி இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியது.

மேலும், கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மஹிந்த அமரவீர, தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துமிந்த திஸாநாயக்க, பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட லசந்த அழகியவண்ண ஆகியோரை நீக்குவதற்கு எதிராக. ஏப்ரல் 1ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டு, பின்னர் கட்சித் தலைமையகத்துக்கு வந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி கட்சித் தலைமையை விமர்சித்தனர்.

கடந்த ஏப்ரல் 04ஆம் திகதியன்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கை தொடர்பான தீர்ப்பை பெற்றுக்கொண்ட மூவரும், கட்சித் தலைமையகத்திற்கு வந்து அங்கிருந்த ஊழியர்களை அழைத்து அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டு, மீண்டும் அதே பதவிகளில் பணியாற்ற ஆரம்பித்துள்ளனர். அங்கு கட்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் வருமாறும் அழைத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்க முடியாது. அவர், ஆலோசகர் பதவியை மாத்திரமே வகிக்க முடியும். இதன்படி, அரசியலமைப்புச் சூழலைப் பயன்படுத்தி, மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வழிநடத்துவதைத் தடுக்க நீதிமன்றத்திடம் உத்தரவைப் பெறுவதற்கு சந்திரிகா குமாரதுங்க தரப்பு வேலை செய்தது. இதன்படி ஐக்கிய மக்கள் முன்னணியை மீண்டும் வலுப்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய சூழ்நிலையில், பொதுஜன ஐக்கிய பெரமுனவின் செயலாளராகப் பதவி வகித்த லசந்த அழகியவண்ண, தொடர்ந்து செயலாளர் பதவிக்கு தகுதி பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியின் எதிர்கால செயற்பாடுகளை தலைமைத்துவ சபையின் ஊடாக ஒழுங்கமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அதனால், அநுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தக் கூட்டணியில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னணியில் இணையும் கட்சிகளின் தலைமைத்துவத்தை முன்னணியின் தலைமைத்துவ சபை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் குறித்த கட்சிக்கு ஐந்துக்கு மேற்பட்ட பாராளுமன்ற பதவிகள் இருந்தால், தலைவர் தவிர மேலும் ஒருவர் தலைமைத்துவ சபையில் அங்கத்தவராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி