எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்காக 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும் டலஸ் அலகபெரும உள்ளிட்ட 4 பேர் இந்த புதிய கூட்டணியில் இணையமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களைத் தவிர, தமது கடந்தகால தவறை உணர்ந்து, புதிய கூட்டணிக்கு வரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்வதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டு, கைசாத்திட்டுள்ளனர்.

இதன்படி, ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, உபுல் கலப்பத்தி, வசந்த யாப்பா பண்டார மற்றும் கே.பி.எஸ் குமாரஸ்ரீ ஆகியோரே இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில், இன்று காலை ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வுகள், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்காக 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளதாக கைசாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி