ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைக் குறிவைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய

வியூகமொன்றை வகுத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு எதிராக சந்திரிகாவால் கொழும்புமேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18ஆம் திகதிவரை சுதந்திரக் கட்சியின் தலைவராகத் தொடர்வதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்றையதினம் கட்டாணை பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, கட்சியில் இருந்து மைத்திரியால் விலக்கப்பட்ட சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க, அமைச்சரான மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சரான லசந்த அழகியவன்ன ஆகியோர் புதிய பாதையில் சுதந்திரக் கட்சி பயணிக்கவுள்ளது என்று அறிவித்துள்ளனர்.

இதனால் சந்திரிகா மீண்டும் சுதந்திரக் கட்சியின் தலைவராக வருவதற்குரிய காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் அவதானிகள் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திர) தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து, தனது தரப்பு உண்மைகளை எதிர்காலத்தில் நீதிமன்றில் முன்வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர், “முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, என்னை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான இடைக்கால தடையுத்தரவை நீதிமன்றில் பெற்றுள்ளார். இந்த கட்சியின் வரலாற்றில், இவ்வாறான சவால்கள் எனக்கும் கட்சிக்கும் புதிதல்ல.

“இதுபோன்ற எத்தகைய சவால்கள் வந்தாலும் அதை எதிர்கொண்டு அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள நாம் தயாராக உள்ளோம். எதிர்காலத்தில் எமது தரப்பு உண்மைகளை நீதிமன்றத்தில் முன்வைப்பதோடு மக்களுக்கும் தெறியப்படுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த கட்டளையை அடுத்து, அக்கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர், சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குப் படையெடுத்து, அங்கு ஊடகச் சந்திப்பையும் நடத்தினர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய பயணத்தை மேற்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக, அந்த ஊடகச் சந்திப்பில் கருத்துரைத்த துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் அழிவைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாத நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, நீதிமன்றத்தை நாடினார். அதற்கிணங்க, கட்சியின் தலைவராக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு, இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி