Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

டெங்கு காய்ச்சலாம் யாழில் 11 மாத சிசு மரணம்

T

The Leader Desk

டிசம்பர் 25, 2023 • 2:43 PM

டெங்கு காய்ச்சலாம் யாழில் 11 மாத சிசு மரணம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பதினொரு மாத சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
  • யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (24) மதியம் வரையான நிலவரப்படி 130 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட இந்தச் சிசு, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

பதினொரு மாத சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட இந்தச் சிசு, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் நிலையில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (24) மதியம் வரையான நிலவரப்படி 130 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்கின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த ஒரு சில வாரங்களாக அதிகரித்த அளவில் டெங்கு நோயாளிகள் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட்டு டெங்கு காய்ச்சல் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு சுகாதார தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...