Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பிணைமுறி மோசடி வழக்கிலிருந்து ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேர் விடுதலை!

T

The Leader Desk

மார்ச் 5, 2022 • 3:09 PM

பிணைமுறி மோசடி வழக்கிலிருந்து ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேர் விடுதலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குற்றச்சாட்டிலிருந்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
  • பொதுச் சொத்து சட்டத்தின் கீழ், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 சந்தேகநபர்களுக்கு எதிராக 36 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பிணைமுறி மோசடி தொடர்பில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
  • இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆயம் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் 11 குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது என தீர்மானித்துள்ளது.
  • மேல் நீதிமன்ற நீதிபதிகளான தமித் தோட்டவத்த மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோர் பிரதிவாதிகளை விடுதலை செய்ததுடன், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தொடர முடியும் என நீதிபதி மொஹமட் இஷாதீன் தீர்ப்பளித்தார்.
எழுத்து அளவு:

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு  நேற்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குற்றச்சாட்டிலிருந்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பொதுச் சொத்து சட்டத்தின் கீழ், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 சந்தேகநபர்களுக்கு எதிராக 36 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பிணைமுறி மோசடி தொடர்பில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆயம்  பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் 11 குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது என தீர்மானித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான தமித் தோட்டவத்த மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோர் பிரதிவாதிகளை விடுதலை செய்ததுடன், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தொடர முடியும் என நீதிபதி மொஹமட் இஷாதீன் தீர்ப்பளித்தார்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் இலங்கை மத்திய வங்கியினால் நடத்தப்பட்ட பத்திர ஏலத்தில் 36 பில்லியனுக்கும் அதிகமான திறைசேரி பத்திரங்கள் தொடர்பில் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், உர்பச்சுவல் ட்ரெஷர்ஸ் பணிப்பாளர்களான ஜெப்ரி அலோசியஸ், அர்சுன் அதுலியாஸ் பிரதிவாதிகளுக்கு எதிராக பொதுச் சொத்துக் குறியீடு உட்பட பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அரசு வழக்கறிஞரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது

இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி லக்மினி கிரிஹாகம, வழக்கை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு குறுகிய கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும், ரவி கருணாநாயக்க தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, இந்தக் கோரிக்கையை ஆட்சேபித்ததுடன், பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டைப் பேண முடியாது என நீதிமன்றத் தீர்ப்பினால் முழு குற்றப்பத்திரிகையையும் பேண முடியாது எனத் தெரிவித்தார்.

சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய முடியாதுள்ளதாகவும், அதன் பிரகாரம் அதனை மீளப்பெறுமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.எவ்வாறாயினும், வழக்கு தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் வரை வழக்கை ஒத்திவைப்பது நெறிமுறையாகாது என தலைமை நீதிபதி தமித் தோட்டவத்த தெரிவித்ததுடன், எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி அழைப்பாணை விடுக்குமாறு உத்தரவிட்டார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பிணைமுறி மோசடி வழக்கிலிருந்து ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேர் விடுதலை! | Tamil Leader | We Lead the Nation