ஐம்பது வருடங்களிற்கு முன்னர் இந்தியா கையளித்த சர்ச்சைக்குரிய கச்சதீவு குறித்து புதிய பேச்சுவார்த்தைகள் எவற்றையும் ஆரம்பிக்க

வேண்டிய தேவை உள்ளதாக இலங்கை கருதவில்லை என, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் களத்தில் கச்சதீவு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

1976ஆம் ஆண்டு, இரண்டு அயல்நாடுகளும் கச்சதீவு குறித்து செய்துகொண்ட உடன்படிக்கையை, தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படும் நரேந்திர மோடி தேர்தல் விவகாரமாக்கியுள்ளார்.

இந்தப் பிரச்சினை, ஐம்பது வருடங்களிற்கு முன்னரே பேசப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மீண்டும் இது குறித்து பேசவேண்டிய அவசியமில்லை” என அலிசப்ரி  தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படும் எனத் தான் கருதவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர், கச்சதீவின் தற்போதைய நிலையில் மாற்றங்கள் வேண்டும் என எவரும் இதுவரை வேண்டுகோள் விடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி