ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் பதவியை ஏற்று, மீண்டும் கட்சியில் இணையுமாறு, அக்கட்சியின் முன்னாள்

பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமையன்று, தயாசிறி ஜயசேகரவை தனது இல்லத்துக்கு அழைத்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, மேற்படி விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட பிரதித் தலைவர் பதவியை தாம் பொறுப்பேற்றால் தமக்கு எதிராக கட்சி முன்வைத்துள்ள குற்றப்பத்திரிகையை மீளப் பெற்றுக் கொள்வதாக மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

ஆனால், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைத் தவிர வேறு எந்தப் பதவியையும் ஏற்கத் தயாரில்லை என்று தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.

எனினும், அந்தக் கோரிக்கையை நிராகரித்த கட்சியின் தலைவர், கட்சியின் பொதுச் செயலாளராக துஷ்மந்த மித்ரபால நியமிக்கப்பட்டுள்ளதால், அவரை அப்பதவியில் இருந்து நீக்க முடியாது எனத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைத் தவிர வேறு எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என மைத்திரிபால சிறிசேனவிடம் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி