"இந்த நாட்டில் தேர்தல்களை தீர்மானிக்க, அமெரிக்கரான பெசிலை அனுமதிக்க முடியாது. இது ராஜபக்ஷர்களின் சொத்து அல்ல” என்று,

மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கட்சியின் பதுளை மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய அவர், தேசிய அரசியலிலும் அரச நிர்வாகத்திலும் தலையிட பெசில் ராஜபக்ஷ யார் எனக் கேள்வி எழுப்பினார்.

“பெசில் என்ற அமெரிக்கர், எப்போதாவது விடுமுறைக்கு வந்து வேடிக்கையாக நடனமாடும் நாடு இதுவல்ல. இந்த நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல், பாராளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்பது, பெசில் என்ற அமெரிக்கரால் தீர்மானிக்கப்படக்கூடிய ஒன்றல்ல. தேசிய அரசியலிலும் அரச நிர்வாகத்திலும் தலையிட, பெசில் யார்? இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, மொட்டுக் கட்சியில் வேட்பாளர் இல்லை என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நான் கேட்கிறேன், எந்த மொட்டில் வேட்பாளர் இல்லை? பெசிலின் மொட்டிலா” என்று, ஜயவீர கேள்வி எழுப்பினார்.

“பசிலின் மொட்டுக்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் இல்லையென்றாலும், மக்களது மொட்டின் வேட்பாளர் தான் என திலித் ஜயவீர கூறுகிறார். “பெசிலின் மொட்டுக்கு, வேட்பாளர்கள் யாரும் இல்லை. ஆனால், மக்களின் மொட்டுக்கு வேட்பாளர் இருக்கிறார். அது நான் தான்” என்றும், திலீத் கூறினார்.

“மொட்டுக் கட்சி, ராஜபக்ஷவின் சொத்தல்ல. மொட்டை வரைந்தவன் நான். "புதிய நாடு" என்ற கருப்பொருளை உருவாக்கியவனும் நானே” என்றும் அவர் கூறினார்.

69 இலட்சம் மக்கள் தமது தேசபக்திக்காக வாக்களித்ததாகவும், நாடு ஒழுக்கமான நாடாக இருக்க வேண்டும் என எண்ணியதாகவும் கூறிய திலித் ஜயவீர, அது பெசிலுக்கும் நாமலுக்கும் கொடுக்கப்பட்ட முன்னுரிமை அல்ல என்றும், தான் அந்த மொட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

“மவ்பிம ஜனதா கட்சி என்றுதான் சொல்கிறோம். இந்த நாட்டின் அப்பாவி மக்களைத் தங்கள் தேவைக்கும் விருப்பத்திற்கும் கடைக்கு அனுப்பலாம் என்று ராஜபக்ஷர்களும், கை கழுவக் காத்திருக்கும் மக்களும் நினைத்தால், அது மிகப் பெரிய தவறு. நாம் அடிமைகள் அல்லர், அவர்களைப் பின்தொடர்ந்துச் செல்ல“ ஏனு்ற, மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி