கோப் குழுவில் இருந்து, தான் விலகப் போவதில்லை என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கோப் குழுவில் இருந்து விலகுவதா வேண்டாமா என்பது தொடர்பில் தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில், எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவரை கோப் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே கட்சியின் கருத்தாகக் காணப்படுகிறது எனவும், இல்லாவிட்டால் அரசாங்கம் தன் இஷ்டப்படி கோப் குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுக்குமென்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, கடந்த மார்ச் மாதம் 07ஆம் திகதியன்று, பாராளுமன்ற பொது விவகாரங்களுக்கான குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டதுடன், ரோஹித அபேகுணவர்தனவின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோப் குழுவில் உள்ள எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

இருப்பினும், ரவூப் ஹக்கீம் மற்றும் நளீன் பண்டார ஆகியோர் மாத்திரம், கோப் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற நிலையில், விலகுவது தொடர்பில் அவர்கள் இதுவரை அறிவிக்கவில்லை.

மார்ச் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார, கோப் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவாரா இல்லையா என்பது தொடர்பில் ரோஹித அபேகுணவர்தன பதில் வழங்காவிட்டால், பாராளுமன்றத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி