கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விரட்டியது தமிழ் - முஸ்லிம் மக்கள்தான் என்று கோட்டாபய ராஜபக்ஷ அவரது

'சதி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதை ஏற்க முடியாது என்றும், அவர்கள்தான் விரட்டினார்கள் என்று தான் கருதவில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறுகையில்,

'ஜனாதிபதி வேட்பாளருக்குத் தகுதியானவர் ரணில் விக்கிரமசிங்கதான். பொருளாதார ரீதியில் வீழ்ச்சிப் பாதையில சென்ற இந்த நாட்டை அவர் மீட்டெடுத்திருக்கிறார். அனைத்துப் பிரச்சினைகளும் மெல்ல தீர்ந்துகொண்டு வருகின்றன.

முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. இதை நான் ஜனாதிபதி ரணிலிடம் கூறியிருக்கின்றேன்.' - என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி