ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்த தினம் இன்றாகும் (24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை). ரணில் விக்கிரமசிங்க, 1949 ஆம் ஆண்டு

மார்ச் மாதம் 24ஆம் திகதி, எட்மண்ட் விக்கிரமசிங்க மற்றும் நளனி விஜேவர்தன ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இந்நிலையில், இன்று தனது 75ஆவது பிறந்தநாளை அவர் கொண்டாடுகிறார்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் பிறந்த அவர், பிற்காலத்தில், கொழும்பு ரோயல் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.

1977ஆம் ஆண்டு பியகம தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்த ரணில் விக்கிரமசிங்க, அதன் பின்னர் தொடர்ந்து 47 வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார்.

அத்துடன், இந்த நாட்டில் 6 தடவைகள் பிரதமர் பதவியை வகித்து சாதனை படைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எத்தகைய சவாலையும், தயங்காமல் கடந்த அரகலய போராட்டத்தின் பின்னர் நாட்டைக் கைப்பற்றினார்.

நாட்டின் பிரதமர் பதவியை கைப்பற்றுவதற்கு, அனைத்துக் கட்சித் தலைவர்களும் பக்கபலமாக இருந்த போது, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவர் செயற்பட்டதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்