ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கும் ஒருவரின் நிபந்தனை வரைவொன்று தயாரிக்கப்படவுள்ளதாக, ஜனநாயக

தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதானது வெற்றி பெறுவதற்கு அல்லவெனவும், தேசிய இனப்பிரச்சினையை தென்னிலங்கைத் தலைமைகள் புறக்கணித்தமையாலேயே என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிகாட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முயற்சிகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

“ஆனால், இந்த மூன்று தலைவர்களும் தமிழ் மக்கள் நீண்டகாலமான நீடித்துவருகின்ற இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைக் காணவேண்டும் என்று போராடி வருகின்றார்கள் என்பதை நன்கு அறிந்தவர்கள்.

“எனினும், அவர்களில் எவருமே தற்போது வரையில் இந்த நாட்டில் இனப்பிரச்சினையொன்று காணப்படுகின்றது. அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை பகிரங்கமாகக் கூறுவதற்கோ தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை முறையாக முன்னெடுப்பதற்கோ தயாராக இல்லை. அவர்கள் தற்போது தமிழ் மக்களுக்கு இனரீதியான பிரச்சினைகள் இல்லை, இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகளே காணப்படுகின்றன என்பதை மையப்படுத்தியே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். அத்துடன், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை மேற்கொள்வதற்கும் தயாராக இல்லை.

“இவ்வாறான நிலையில்தான், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மும்முனை தேர்தல் காணப்படுவதால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியைக் கொண்டிருக்கின்றது. ஆகவே, சிறுபான்மை மக்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பதில் பெரும் செல்வாக்கைச் செலுத்தவுள்ளன.

“எனவே தான், தென்னிலங்கை தலைவர்களுக்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை வெளிப்படுத்தும் முகமாக அவர்களின் வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகள் அவர்களுக்கு செல்வதை தடுக்கும் முகமாகவே தமிழர்களின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முயற்சிகளை எடுத்துள்ளோம்.

“அவ்வாறு வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் எமக்கு தேர்தலில் வெற்றி கிடைக்காது என்பதை நன்கே அறிந்துள்ளோம். ஆனால் தமிழ் மக்கள் அனைவரும் ஏகோபித்து வாக்களிக்கும்போது தென்னிலங்கைத் தலைவர்கள் பெரும்பான்மையை உறுதி செய்வது மிகக் கடினமாக இருக்கும். ஆகவே, அவர்கள் தமிழ் மக்களை நோக்கி வரவேண்டிய தேவை ஏற்படும்.

“அப்போது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உள்ளடக்கிய நிபந்தனைகளை தமிழ் பொதுவேட்பாளர் கொண்டிருப்பார். அதனடிப்படையில் அதனை மையப்படுத்தி பேச்சுக்களை முன்வரும் வேட்பாளருடன் நடத்துவதற்கு தயாராகவே உள்ளோம்.

“அதற்காக, தமிழ் பொதுவேட்பாளர் கொண்டிருக்க வேண்டிய நிபந்தனைகள் சம்பந்தமான வரைவொன்று தயாரிக்கப்படவுள்ளது. அத்துடன் தென்னிலங்கை தலைவர்கள் அல்லது வேட்பாளர்கள் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராகின்றபோது அவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான உயர்மட்டக்குழுவொன்றும் உருவாக்கப்படவுள்ளது” என்றார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி