கடந்த சில தினங்களாக வெளிநாட்டிலிருந்த பிரசன்ன ரணதுங்க மற்றும் நிமல் லன்சா ஆகிய இருவரும், நாடு திரும்பியுள்ளனர். நாடு

திரும்பிய உடனேயே ஆட்டத்தை ஆரம்பித்துள்ள பிரசன்ன, மேல் மாகாணத்தின் வருடாந்த சுகாதார இடமாற்றங்களை, தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண ஆளுநர் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் வருடாந்த இடமாற்றங்கள் முறைசாரா முறையில் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி, மேல்மாகாண வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள், கடந்த 18-ம் திகதியன்று, நகர அபிவிருத்தி அமைச்சின் பொது தினத்திற்கு வந்து உண்மைகளை முன்வைத்தனர்.

செய்தியின்படி, மேல் மாகாணத்தில் இருந்து சுமார் 300 சுகாதார ஊழியர்கள், அமைச்சரை சந்திக்க வந்துள்ளனர். முறைசாரா முறையில் இந்த வருடாந்த இடமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதன்போது, மேல்மாகாண ஆளுநர் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவை தொலைபேசியில் அழைத்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவர்களுடன் மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று ஆளுநரை சந்தித்தார். இந்த வருடாந்த இடமாற்றங்களை மேற்கொள்ளும் போது, தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக மாகாண சுகாதார அமைச்சின்

சில சுகாதார தொழிற்சங்கங்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை புறக்கணித்துள்ளதாக கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஊழியர்கள் தெரிவித்தனர். சில சுகாதார தொழிற்சங்கங்கள், நிறுவனங்களின் தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி, சுகாதார சேவைகளை சீர்குலைத்து அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதாக அமைச்சர் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையான சுகாதார ஊழியர்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு, இந்த இடமாற்றங்களை தற்காலிகமாக இரத்து செய்து, முறையாக நடைமுறைப்படுத்துமாறு ஆளுநரிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், இந்த இடமாற்றங்களை தற்காலிகமாக ரத்து செய்ததுடன், சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து, வருடாந்த இடமாற்றங்களை எந்தத் தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்படுத்தாத வகையில் நடைமுறைப்படுத்துமாறு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

அதன் பின்னர், மேல்மாகாண சபையின் அடிமட்ட சுகாதார ஊழியர்களிடம் சென்று உரையாற்றியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சுகாதாரச் சேவையை சீர்குலைக்க, சில தொழிற்சங்கங்களால் சதி செய்யப்படுவதாகவும் அவற்றுக்கு சிக்கிக்கொள்ள வேண்டாமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக, சில சுகாதார சங்கங்கள் அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்புவதாக பிரசன்னா கூறினார். அமைச்சர் பிரசன்னவின் இந்தக் கதையில் உண்மை, பொய் எதுவாக இருந்தாலும், நாட்டின் அரசியல் கருத்தை வடிவமைப்பதில் தொழிற்சங்கங்களுக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. மேலும், அந்தத் தொழிற்சங்கங்கள், தங்கள் சொந்த அரசியல் அபிலாஷைகளால் வழிநடத்தப்படுகின்றன. அதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி