சமீப நாட்களாக, திசைக்காட்டிக்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராக தீவிர அவதூறு பரப்புரை மேற்கொள்ளப்படுவதை

தொடர்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளோம். அவ்வாறான சம்பவமொன்று, ஓரிரு தினங்களுக்கு முன்னரும் இடம்பெற்றது. ஐமசவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹிருணிகா பிரேமச்சந்திர, திசைகாட்டி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். திஸ்ஸ ஜனநாயக்க என்ற ஆசிரியர் ஆற்றிய உரையை, தான் கேட்டதாகக் குறிப்பிட்டு, அனுரகுமார திஸாநாயக்க தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

“திஸ்ஸ ஜனநாயக்க என்ற ஆசிரியரின் கதையைக் கேட்டேன். அந்த மனிதர் சொல்கிறார், “அந்த நாட்களில் அவர் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, என்னுடைய கட்டிலுக்கு மேல் கட்டிலில், ஒரு சகோதரன் இருந்தார். தினமும் இரவு பன்னிரெண்டு, ஒரு மணியளவில், எமது ஹொஸ்டல் ஜன்னல் கதவில் குதித்து, எங்கேயோ போவார்.”

“மீண்டும் காலை ஏழு அல்லது எட்டு மணிக்கு ஜன்னல் வழியாக உள்ளே வந்து உறங்குவார். அவர்தான் அனுரகுமார திஸாநாயக்க. அதாவது, அவர் பல்கலைக்கழகம் செல்லும் போது படிக்கவில்லை. அந்த நள்ளிரவில், அவர் என்ன பூ பறிக்கவா செல்கிறார்? வீடுகளில் கொள்ளையடிக்கவும் படுகொலைகளைச் செய்யவும்தான் அவர் சென்றிருக்கிறார்” என, ஹிருணிகா தெரிவித்திருக்கிறார்.

தன்னைக் குறிப்பிட்டு, ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்திருந்த கருத்துக்கு, திஸ்ஸ ஜனநாயக்க, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், கடந்த 12-ம் திகதியன்று குறிப்பொன்றைப் பதிவிட்டிருந்தார். ஹிருணிகா தெரிவித்திருந்த கருத்துக்களை, தான் ஒருபோதும் தெரிவித்திருக்கவில்லை என்று, அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவரது பதிவில், இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

“அனுரகுமார பற்றி எனது யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மேற்கோள் காட்டி, கடந்த 11-ம் திகதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்த கருத்து தொடர்பில், சில விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

‘ஹிருணிகா கூறியது போல், அனுரகுமார திஸாநாயக்க பல்கலைக்கழக வாழ்வில் சில நாட்களில் இரவு வேளைகளில், விடுதி அறையில் தங்கவில்லை என நான் கூறியது உண்மை. ஆனால், அவரது பேச்சில் சொல்லப்படும் மேலதிக விஷயங்களுக்கு நான் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இல்லை.

“அநுரகுமாரவின் நடத்தைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தெரிவித்த கருத்துக்கள், நான் குறிப்பிட்டவை அல்ல. குறித்த காணொளியில் அப்படி எதுவும் இடம்பெறவில்லை” என திஸ்ஸ ஜனநாயக்க தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எம்சிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால், இலங்கையில் அமெரிக்க வழித்தடம் உருவாக்கப்படும் என்று கூறி, கோட்டாபயவை ஜனாதிபதியாக்கிய இனவாத அலையை தூண்டிய திஸ்ஸ தரப்பு, அப்போது திசைகாட்டி பற்றி கவலைப்படவில்லை. ஆனால் இதுவரை ஜேவிபி தலைமையிலான திசைகாட்டியின் தலைவர்கள் பற்றி குழப்பமான விடயங்கள் வெளிவந்தாலும், அவர்கள் தொப்பியைப் புரட்டிப் பதிலளித்து வருகின்றனர். உண்மைகள் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. எப்படி மாறியிருக்கிறது பாருங்கள் இந்த  அரசியல் ரசாயனம்!

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி