சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் 8 பேர் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு, உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் 8 பேர், பிரதிப் பொலிஸ் மா அதிபரொருவர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, வடமத்திய மாகாணத்துக்கும் தென் மாகாணத்துக்குப் பொறுப்பாகவிருந்த சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.சி. மெதவத்த, பொலிஸ் பயிற்சிக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பாகவிருந்த சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பி.எம். குணரத்ன, மேல் மாகாணத்துக்கும் பிரஜா பொலிஸ் மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டுக்குப் பொறுப்பாகவிருந்த எஸ்.டபிள்யூ.எம். சேனாரத்ன, தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்ப் பணிப்பாளராகக் கடமையாற்றிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.ஏ.கே. பியசேகர, களுத்துளை பொலிஸ் பிரிவுக்கும் கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய ஈ.எம்.எம்.எஸ். தெஹிதெனிய, குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளராகபுவும் மாற்றப்பட்டுள்ளார் என்று, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி