அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணைவில் தந்தை ஒருவர், தனது இரண்டு பிள்ளைகளைக் கழுத்தறுத்துப் படுகொலை செய்துள்ளார்.

பின்னர் அவரும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது என்று பெரிய நீலாவணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில் இரண்டு பிள்ளைகளின் சடலங்களும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டன. வணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனவளர்ச்சி குன்றிய ஆண், பெண் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு தற்கொலையில் ஈடுபட்ட தந்தையும் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச் சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவத்தில் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் (வயது 29), முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது 15) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். அவர்களது தந்தையான முஹம்மது மிர்சா முகமது கலீல் (வயது 63), இரத்தக் காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மரணமடைந்த பிள்ளைகளின் தாய், கடந்த 5 மாதங்களுக்கு முன்னர உயிரிழந்துவிட்டார் என்று மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்கவின் வழிநடத்தலில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி