நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக காவல்துறை தலைமையகத்தில்

ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0718598800 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் ஊடாக பொது மக்கள் விசேட நடவடிக்கை பிரிவுக்கு தகவல் வழங்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவசர சேவை இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டவர்களின் அடையாளங்களை கண்டுபிடிக்க முடியாது என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் விசேட சுற்றிவளைப்பில் 653 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் குற்றத்தடுப்பு பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள 67 சந்தேகநபர்களும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 586 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஹெரோயின், ஐஸ், கஞ்சா, மாவா போதைவில்லைகள் உள்ளிட்ட பல போதைப்பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி