சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், நேற்று இரவு வெள்ளிக்கிழமை

(01) கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக வைத்தியர் சமன் ரத்நாயக்க, நேற்று வெள்ளிக்கிழமை (01) பிற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்தார்.

சுமார் 7 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி