Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல்

T

The Leader Desk

ஜனவரி 10, 2025 • 11:21 AM

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.
  • இதன்பொழுது உயிரிழந்த ஒன்பது உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
  • இதேவேளை உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51வது ஆண்டு நினைவேந்தல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே .சிவாஜிலிங்கத்தின் அழைப்பின் பெயரில் உலகத் தமிழராய்சசி மாநாட்டு படுகொலை நினைவு தூபியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
எழுத்து அளவு:

படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில்  இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் அதன் பதில் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்பொழுது உயிரிழந்த ஒன்பது  உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் பொதுச்சுடர்  ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில்  வடமாகாண அவைத்தலைவரும்  இலங்கை தமிழரசு கட்சியின்  பதில் தலைவருமான சி.வி.கே சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் சர்வேஸ்வரன்,

வடக்கு மாகாண சபை முன்னாள உறுப்பினரான சுகிர்தன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட், இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள்,ச மூக செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின்  51வது ஆண்டு நினைவேந்தல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே .சிவாஜிலிங்கத்தின் அழைப்பின் பெயரில் உலகத் தமிழராய்சசி மாநாட்டு படுகொலை நினைவு தூபியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

இதன் பொழுது  பொதுச்சுடரினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது.

இதன் பொழுது பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன்,

உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் கருணாகர, நாவலன் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜோதிலிங்கம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...