Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கு பாராளுமன்றில் புதிய பதவி

T

The Leader Desk

ஜனவரி 10, 2025 • 3:50 AM

சாணக்கியன் எம்.பிக்கு பாராளுமன்றில் புதிய பதவி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இணைத் தலைவர்களாக பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
  • பத்தாவது பாராளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம், கடந்த 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
  • ஒன்றியத்தின் இணைத் தலைவராக அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜனக சேனாரத்ன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் அதனை வழிமொழிந்தார்.
எழுத்து அளவு:

இணைத் தலைவர்களாக பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வொன்றியத்தின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதி இணைத் தலைவர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பத்தாவது பாராளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம், கடந்த 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது, ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஒன்றியத்தின் இணைத் தலைவராக அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜனக சேனாரத்ன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் அதனை வழிமொழிந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கத்தின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வழிமொழிந்தார்.

அத்துடன், இந்த ஒன்றியத்தின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவு செய்யப்பட்டதுடன், பிரதி இணைத் தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, சந்தன சூரியஆரச்சி, எஸ்.எம்.மரிக்கார் மற்றும் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அங்கு உரையாற்றிய ஒன்றியத்தின் இணைத் தலைவர்கள், பாராளுமன்றத்தை பொதுமக்களுக்கு நெருக்கமடையச் செய்வதற்கு இந்த ஒன்றியத்தின் மூலம் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். அதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...