Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 10ஆம் திகதி ஆர்ப்பாட்டம்

T

The Leader Desk

டிசம்பர் 8, 2023 • 4:35 AM

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 10ஆம் திகதி ஆர்ப்பாட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீதி பெற்றுத் தருவதை வலியுறுத்தி 10ஆம் திகதி மனித உரிமை தினத்தன்று நடைபெறும் போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
  • அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் 13 வருடங்களிற்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி வருவதுடன், நீதி கேட்டு போராடி வருகின்றோம்.
  • எதிர்வரும் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம்.
  • மிக குறுகிய 2 ஆண்டுகளிற்குள் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.
எழுத்து அளவு:

நீதி பெற்றுத் தருவதை வலியுறுத்தி 10ஆம் திகதி மனித உரிமை தினத்தன்று நடைபெறும் போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் 13 வருடங்களிற்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி வருவதுடன், நீதி கேட்டு போராடி வருகின்றோம். எமது போராட்டத்திற்கு ஆண்டுகள் பல கடந்தாலும் நீதி இன்றுவரை கிடைக்கவில்லை.

“காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களிற்கென நிதிகள் ஒதுக்கப்படுவதாக அறிகிறோம். நாங்கள் நிதிக்காக போராடவில்லை. நீதிக்காகவே போராடுகின்றோம். எமக்கு நிதி தேவை இல்லை. நீதியே எமக்கு தேவை.

“இந்த நிலையில், சில ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் எம்மால் சொல்லப்படாத விடயங்களை வெளியிடுகின்றனர். நிதியை எதிர்பார்த்து நிற்பதுபோல் எழுதுகின்றனர். நாங்கள் என்றும் நிதிக்காக போராடவில்லை. எமக்கு நீதியே தேவை.

“இலங்கை அரசு நீதி தராது என்பதாலேயே நாங்கள் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிற்கின்றோம். எதிர்வரும் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம். அன்று நாங்கள் வடக்கு கிழக்கில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

“இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மிக குறுகிய 2 ஆண்டுகளிற்குள் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.

“நாங்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமைக்கும், கொடூர யுத்தத்தை முன்னெடுத்தார்கள் என்பதற்கும், காணாமல் ஆக்கச் செய்தார்கள் என்பதற்குமான பல சாட்சிகள் ஆதாரங்களுடன் உள்ள போதிலும் எமக்கு நீதி வழங்க எந்த நீதிமன்றமும் முன்வரவில்லை.

“இலங்கை அரசும், சர்வதேசமும் நீதியை வழங்க முன்வரவில்லை. இந்த நிலையிலேயே நாங்கள் எதிர்வரும் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று மாபெரும் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

“இந்த போராட்டம் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சியில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எமது அலுவலகத்திற்கு முன்பாகவும் இடம்பெறும். குறித்த போராட்டத்திற்கு வர்த்தகர்கள், சிவில் அமைப்புக்கள் என அனைவரும் ஒத்துழைத்து எம்முடைய போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...