Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

மீண்டும் கொரோனா: 1 வருடத்துக்குப் பின்னர் ஒருவர் மரணம்

T

The Leader Desk

டிசம்பர் 23, 2023 • 3:05 PM

மீண்டும் கொரோனா: 1 வருடத்துக்குப் பின்னர் ஒருவர் மரணம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையில் ஒரு வருடத்துக்குப் பின்னர் உத்தியோபூர்வமாக உறுதிப்படுத்திய கொரோனா மரணம் கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று பதிவாகியுள்ளது.
  • கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபர் ஒருவர் கொவிட் தொற்றால் இன்று (23) உயரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • இலங்கையில் மீண்டும் J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு பரவி வருகின்றது.
  • எனினும் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

இலங்கையில் ஒரு வருடத்துக்குப் பின்னர் உத்தியோபூர்வமாக உறுதிப்படுத்திய கொரோனா மரணம் கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று பதிவாகியுள்ளது.

கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபர் ஒருவர் கொவிட் தொற்றால் இன்று (23) உயரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொவிட் காலத்தில் போன்று மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு பரவி வருகின்றது. இதன் காரணமாக சளி, காய்ச்சல் போன்ற நிலைமை ஏற்படலாம். எனினும் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

J N 1 OMICRON கொவிட் பிறழ்வின் நோய் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மணமின்மை மற்றும் சுவையின்மை, அதிக வெப்பம், சுவாசக் கோளாறு, உணவு தவிர்ப்பு மற்றும் வாந்தி என்பன காணப்படுகின்றன. இவ்வாறான நோய் அறிகுறிகள் காணப்படும் போது வைத்தியரை நாடுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவிலும் J N 1 OMICRON உப பிறழ்வு பரவி வருவதோடு இந்தியாவில் இதுவரை 2660 கோவிட் நோயாளர்கள் கணடறியப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பரவி வரும் இந்த J N 1 கொவிட் பிறழ்வு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மீண்டும் கொரோனா: 1 வருடத்துக்குப் பின்னர் ஒருவர் மரணம் | Tamil Leader | We Lead the Nation