Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பரீட்சை விடைத்தாள் கசிவு: குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்

T

The Leader Desk

ஜனவரி 8, 2025 • 5:13 AM

பரீட்சை விடைத்தாள் கசிவு: குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • வடமத்திய மாகாணத்தில் 6 மற்றும் 7ஆம் வகுப்பு புவியியல் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை சமூக ஊடகங்களில் கசியவிட்டதை, ஆசிரியர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
  • இந்த தேர்வுகள் இந்த மாதம் 10ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • இதற்கிடையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்புக்கான பருவத் தேர்வுகள் அடுத்த 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என்று வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
எழுத்து அளவு:

ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வடமத்திய மாகாண கல்விச் செயலாளரால் இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமத்திய மாகாணத்தில் 6 மற்றும் 7ஆம் வகுப்பு புவியியல் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை சமூக ஊடகங்களில் கசியவிட்டதை, ஆசிரியர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.

இந்த தேர்வுகள் இந்த மாதம் 10ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்புக்கான பருவத் தேர்வுகள் அடுத்த 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என்று வடமத்திய மாகாண கல்வித்  திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், கசிந்ததாக கூறப்படும் தேர்வுத் தாள்கள் மீண்டும் தயாரிக்கப்படும் என்றும் தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடமத்திய மாகாணத்தில் உள்ள அரசப் பாடசாலைகளில் 11ஆம் வகுப்புத் தேர்வுத் தாள்கள் கசிந்ததற்கான விசாரணை, அநுராதபுரத்தில் உள்ள மூத்த பொலிஸ் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ், அநுராதபுரம் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிங்கள இலக்கியம், அறிவியல் மற்றும் ஆங்கில தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததால், வடமத்திய மாகாணத்தில் உள்ள அரசப் பாடசாலைகளில்  11ஆம் வகுப்புக்கான அனைத்துப் தேர்வுகளும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...