Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

கல்கிஸை துப்பாக்கிச்சூடு: பல தகவல்கள் வெளியாகின!

T

The Leader Desk

ஜனவரி 7, 2025 • 3:46 PM

கல்கிஸை துப்பாக்கிச்சூடு: பல தகவல்கள் வெளியாகின!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்திருந்தனர்.
  • இன்று அதிகாலை 4.25 மணியளவில், கல்கிஸை - வட்டரப்பல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
  • சம்பவம் தொடர்பில் ஸ்தல விசாரணை இன்று காலை கல்கிஸை நீதவான் சத்துரிகா சில்வாவினால் மேற்கொள்ளப்பட்டது.
  • போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கொல்லப்பட்ட இருவரில் ஒருவரின் பாட்டி மற்றும் சகோதரன் ஆகியோர், நேற்று (06) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னணியிலேயே, இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்திருந்தனர்.

இன்று அதிகாலை 4.25 மணியளவில், கல்கிஸை - வட்டரப்பல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்..

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள போதைப்பொருள் வியாபாரிகளான படோவிட்ட அசங்க மற்றும் கொஸ்மல்லி ஆகியோருக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாகவே, இந்த இரட்டைக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வீட்டினுள் இருந்த மனோ எனப்படும் 36 வயதான சுதத் கோமஸ், 9mm ரக துப்பாக்கி மற்றும் கல்கடஸ் ரக துப்பாக்கியால் சுடப்பட்டதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதுடைய சந்துன் என்றழைக்கப்பட்ட ஷானக்க விமுக்தி என்ற இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தப்பியோடிய இரண்டு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளும், இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் ஸ்தல விசாரணை இன்று காலை கல்கிஸை நீதவான் சத்துரிகா சில்வாவினால் மேற்கொள்ளப்பட்டது.

கொல்லப்பட்ட இருவரும் போதைப்பொருள் வியாபாரி படோவிட்ட அசங்க என்பவருடன் தொடர்பில் இருந்தமையினால்,  கொஸ்மல்லியின் தரப்பினால் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கொல்லப்பட்ட இருவரில் ஒருவரின் பாட்டி மற்றும் சகோதரன் ஆகியோர், நேற்று (06) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னணியிலேயே, இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள், மேல் மாகாண தெற்கு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...