Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஆட்டோக்களில் கண்டதையும் தொங்கவிட்டால் சிக்கல்!

T

The Leader Desk

ஜனவரி 6, 2025 • 1:32 PM

ஆட்டோக்களில் கண்டதையும் தொங்கவிட்டால் சிக்கல்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வகைகளின் கீழ் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட குறிப்பிட்டுள்ளார்.
  • எவ்வாறாயினும், வாகனங்களின் பல்வேறு வகையான ஒலிப்பான்களைப் பொருத்துதல்கள், பல்வேறு நிறங்களிலான வண்ண மின்விளக்குகள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை அகற்றுவதற்கு சாரதிகளுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • இது தொடர்பில் சாரதிகள் மற்றும் பொதுமக்களை தெளிவுபடுத்தும் முன்னோடித் திட்டம், எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
  • இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன், முன்னோடித் திட்டமாக சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, 19ஆம் திகதிக்கு முன்னர் அந்த சட்டவிரோத பொருத்துதல்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.
எழுத்து அளவு:

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வகைகளின் கீழ் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட குறிப்பிட்டுள்ளார்.

"முச்சக்கர வண்டியில் மாற்றம் செய்வதாயின், அதன் உண்மையான தன்மையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாமல், உரிய மாற்றங்கள் வாகனத்தின் புத்தகத்தில் குறிப்பிடப்படல் வேண்டும். அப்போது, சோதனை செய்யும் பொலிஸாரால், அந்த மாற்றங்கள் போக்குவரத்து திணைக்களத்துக்கு பணம் செலுத்தி, உரிய அனுமதியுடன்தான் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை இலகுவாக அறிந்துகொள்ள முடியும்” என்றார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஜூலை 7, 2023 முதல் முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை நிறுவுவதற்கும் அலங்கரிப்பதற்கும் அனுமதி வழங்கியிருந்தது.

இங்கு, முச்சக்கரவண்டிகளுக்கு மேலதிக உபகரணங்கள் பொருத்துதல் மற்றும் அலங்காரம் செய்வதற்காக முச்சக்கரவண்டி சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, திணைக்களம் பல நிபந்தனைகளின் கீழ் இந்த அனுமதியை வழங்கியதாக, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வாகனங்களின் பல்வேறு வகையான ஒலிப்பான்களைப் பொருத்துதல்கள், பல்வேறு நிறங்களிலான வண்ண மின்விளக்குகள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை அகற்றுவதற்கு சாரதிகளுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் சாரதிகள் மற்றும் பொதுமக்களை தெளிவுபடுத்தும் முன்னோடித் திட்டம், எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை வழங்கியிருந்தார்.

இதன்படி, பல்வேறு ஒலிப்பான்கள், வெவ்வேறு வண்ண மின்விளக்குகள், சட்டவிரோத பொருத்துதல்கள், அதிக சத்தத்துடன் கூடிய ஒலிப்பான்கள், அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள், விபத்துக்களை அதிகரிக்கும் வகையில் உதிரி பாகங்களை பொருத்துதல் போன்ற வாகனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன், முன்னோடித் திட்டமாக சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, 19ஆம் திகதிக்கு முன்னர் அந்த சட்டவிரோத பொருத்துதல்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.

குறித்த காலத்தின் பின்னர் அவ்வாறான சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...