Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

எக்னெலிகொட சுட்டுக் கொல்லப்பட்டாரா?: நீதி கோரும் சந்தியா

T

The Leader Desk

ஜனவரி 5, 2025 • 4:38 AM

எக்னெலிகொட சுட்டுக் கொல்லப்பட்டாரா?: நீதி கோரும் சந்தியா   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விவகாரம் தொடர்பில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் தற்போதைய நீதிமன்ற செயன்முறை ஆகியவற்றின் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கின்றது.
  • "பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 2015ஆம் ஆண்டின் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மிகச் சிறப்பான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
  • தற்போதைய அரசின் மீது நம்பிக்கை வைத்து, விரைவாக நீதியை நிலைநாட்டுமாறு கோருகின்றேன்" என பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார்.
எழுத்து அளவு:

விவகாரம் தொடர்பில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் தற்போதைய நீதிமன்ற செயன்முறை ஆகியவற்றின் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கின்றது. எனவே. தற்போதைய அரசின் மீது நம்பிக்கை வைத்து, விரைவாக நீதியை நிலைநாட்டுமாறு கோருகின்றேன்" என பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார்.

சுயாதீன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த நீதிமன்ற வழக்கு விசாரணைகள் இன்னமும் நிறைவடையாத நிலையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைவாக பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டார் என்று முன்னாள் கடற்படை வீரர் என அடையாளப்படுத்தும் ஆர்.பி.டி.பி. பிரசன்ன பியசாந்த அண்மையில் தனியார் யூடியூப் தளத்துக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து நீண்ட காலமாக நீதியைக் கோரி போராடி வரும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவிடம் வினவிய போது, தான் அந்த நேர்காணலைப் பார்வையிடவில்லை என அவர் பதிலளித்தார்.

"பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 2015ஆம் ஆண்டின் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மிகச் சிறப்பான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த விசாரணைகள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கின்றது.

அவற்றின் அடிப்படையில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. அவ்வாறிருக்கையில், அந்த வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தி, நீதியை நிலைநாட்டுமாறு அரசிடமும், உரிய அதிகாரிகளிடமும் என்னால் கோர முடியுமே தவிர வேறு எதனையும் செய்ய முடியாது." - என்றும் சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...