Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

அலைபேசியை ஷார்ஜில் போட்டு பார்த்துக் கொண்டிருந்த 14 வயது மாணவி பலி

T

The Leader Desk

ஜனவரி 4, 2025 • 2:44 PM

அலைபேசியை ஷார்ஜில் போட்டு பார்த்துக் கொண்டிருந்த 14 வயது மாணவி பலி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • இந்த சம்பவம் நேற்று (03) மாலை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • இவர் ஹசலக்கவில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9இல் கல்வி கற்று வந்துள்ளார்.
  • சில நிமிடங்களில் அவரது அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.
எழுத்து அளவு:

மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் நேற்று (03) மாலை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹசலக்க, தொரபிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த மெத்மி சிதும் குமாரி என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் ஹசலக்கவில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9இல் கல்வி கற்று வந்துள்ளார்.

அம்மாவிடம் கையடக்க தொலைபேசியை வாங்கிக்கொண்டு சிறுமி அறைக்குச் சென்றுள்ளார். சில நிமிடங்களில் அவரது அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.

சத்தம் கேட்டு அவளது அம்மா, அப்பா, அக்கா ஆகியோர் அறைக்குச் சென்று பார்த்தபோது, ​​அவள் தூங்கிக் கொண்டிருந்த இரும்புக் கட்டிலைப் பிடித்துக்கொண்டு அலறிக் கொண்டு இருந்துள்ளார்.

பின்னர், சிறுமியின் தாத்தா படுக்கைக்கு அருகில் இருந்த மின் இணைப்பை துண்டித்துள்ளார். பின்னர் ஹசலக்க வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மஹியங்கனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், மஹியங்கனை வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...