Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இராணுவ, புலனாய்வு கண்காணிப்புகளை விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

T

The Leader Desk

ஜனவரி 3, 2025 • 4:33 PM

இராணுவ, புலனாய்வு கண்காணிப்புகளை விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கண்காணிப்பு கடமைகளை மேலும் விரிவுபடுத்துமாறு, பாதுகாப்பு படைத் தளபதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
  • கடந்த ஆண்டு இலங்கை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பின் கீழ், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 370 வழக்குகளில் 451 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
  • இந்த நடவடிக்கைகளின் போது, கிட்டத்தட்ட 3570 கிலோ கஞ்சா, 1040 கிலோ கேரள கஞ்சா, 11 கிலோ ஐஸ் மற்றும் 61 கிலோ ஹெரோயின் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
  • அத்துடன், குஷ் மற்றும் ஹாஷிஸ் போதைப் பொருட்களும் இதன்போது கைப்பற்றப்பட்டதோடு, சுமார் 850 லீற்றர் சட்டவிரோத உள்நாட்டு மதுபானம் மற்றும் 15,000 லீற்றர் கோடா மற்றும் 68 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கண்காணிப்பு கடமைகளை மேலும் விரிவுபடுத்துமாறு, பாதுகாப்பு படைத் தளபதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமாரவினால் முன்வைக்கப்பட்ட தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்திற்கு அமைவாக, இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பின் கீழ், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 370 வழக்குகளில் 451 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நடவடிக்கைகளின் போது, கிட்டத்தட்ட 3570 கிலோ கஞ்சா, 1040 கிலோ கேரள கஞ்சா, 11 கிலோ ஐஸ் மற்றும் 61 கிலோ ஹெரோயின் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், குஷ் மற்றும் ஹாஷிஸ் போதைப் பொருட்களும் இதன்போது கைப்பற்றப்பட்டதோடு, சுமார் 850 லீற்றர் சட்டவிரோத உள்நாட்டு மதுபானம் மற்றும் 15,000 லீற்றர் கோடா மற்றும் 68 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 7340 கிலோ பீடி இலைகளும் கைப்பற்றப்பட்டதோடு 17,000 சிகரெட்டுக்களும் கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...