Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பசிலின் சொத்துகள் பற்றி விமலிடம் வாக்குமூலம் பெற்ற சிஐடி

T

The Leader Desk

ஜனவரி 3, 2025 • 10:57 AM

பசிலின் சொத்துகள் பற்றி விமலிடம் வாக்குமூலம் பெற்ற சிஐடி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் தகவல்களை வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.
  • அவரது மகன் மற்றும் உறவினர்கள் சிலரது பெயரிலும் சொத்துக்கள் உள்ளன.
  • அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபக்ஷவின் சொத்துக்கள் குறித்து கடந்த காலத்தில் விமல் வீரவங்ச வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு இன்று வெள்ளிக்கிழமை அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றிருந்தது.
எழுத்து அளவு:

சொத்துகள் உள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் தகவல்களை வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபக்ஷவின் சொத்துக்கள் குறித்து கடந்த காலத்தில் விமல் வீரவங்ச வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு இன்று வெள்ளிக்கிழமை அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றிருந்தது.

வாக்குமூலத்தை அளித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “பசில் ராஜபக்ஷவுக்கு அமெரிக்காவில் இருக்கும் சொத்துகள் தொடர்பில் நான் வெளியிட்டிருந்த கருத்துகள் குறித்து வாக்குமூலமொன்றை பெற வேண்டுமென குற்றப்புலனாய் பிரிவு அழைத்திருந்தது. என்னிடம் உள்ள தகவல்களை அவர்களிடம் வழங்கியுள்ளேன்” என்றார்.

அமெரிக்காவில் எந்தவொரு பணியும் புரியாத பசில் ராஜபக்சவுக்கு எவ்வாறு அங்கு பாரிய அளவிலான சொத்துக்கள் இருக்க முடியும். அவரது மகன் மற்றும் உறவினர்கள் சிலரது பெயரிலும் சொத்துக்கள் உள்ளன.

இந்த அரசாங்கம் உண்மையான ஊழல், மோசடியாளர்கள் குறித்து விசாரணைகள் செய்வதாக எமக்கு தெரியவில்லை. தற்போது பசில் ராஜபக்சவின் சொத்துக்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுள்ளனர்.

அவர் இரட்டை குடியுரிமை கொண்டவர் என்பதால் விசாரணைகளை துரிதமாக ஆரம்பிக்க முடியும்.

இந்த விடயத்தில் அரசாங்கம் உண்மையான விசாரணைகளை ஆரம்பித்தால் எம்மிடம் மேலதிக தகவல்கள் இருந்தால் அதனை வழங்க முடியும். என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...